Ads (728x90)

தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்துமாறு ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ உத்தரவிட்டுள்ளார். இச்சம்பள உயர்வு மார்ச் 01ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் எனவும் அறிவித்துள்ளார்.

உட் கட்டமைப்பு வசதிகள் உட்பட தோட்டத்துறையின் அனைத்து பகுதிகளையும் அபிவிருத்தி செய்வதற்கு விரைவான நடவடிக்கைகளை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தோட்டத்துறையின் தரத்தை அதிகரிக்க வரி விலக்கு அளித்தல் மற்றும் உர மானியம் வழங்குதல் போன்ற பல முயற்சிகளை அரசாங்கம் எடுத்துள்ளது. இவற்றின் நன்மைகள் தொழிலாளர்களைப் போய் சேர வேண்டும் எனவும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget