தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடையில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று தமிழ் ஊடகப் பிரதானிகள் உடனான சந்திப்பு காலை அலரிமாளிகையில் இடம்பெற்றபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களினால் கொண்டு வரப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை என்றும், தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுவதனைத் தவிர வேறு எந்த நன்மைகளும் அவர்களுக்கு நல்லாட்சியில் கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
இடத்தினை பொறுத்தே எந்த மொழில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும், குறிப்பாக நான் தமிழ் பாடசாலையில் இடம்பெறும் நிகழ்வொன்றுக்கு சென்றால் அங்கு தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதில் பிரச்சனை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment