புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்துக்குள் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறித்து மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து முற்று முழுதாக அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையை மாத்திரம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையின் உறுதிமொழிகளை நிறைவேற்றுவதனை பின்தள்ளி வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வேட்டையாடப்படுகின்றனர்.
மேலும் கடந்த அரசாங்க காலத்தில் வழங்கப்பட்ட வேலைவாய்ப்புகள் பலவற்றை இரத்துச் செய்தும் மற்றும் குறித்த வேலை வாய்ப்புகளுக்கு உள்வாங்கப்பட்டவர்களை வேலைகளில் இருந்து வெளியேற்றியும் அரசியல் பழிவாங்கல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment