வடக்கு மாகாணத்தில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லையென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிவிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீண் வததந்திகளை கேள்வியுற்று வடக்கு மகாணத்திலுள்ள வாகன சாரதிகள் நேற்று காலை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
இதை அவதானித்த வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் வடக்கு மாகாண மக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது என்ற செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென்றும், போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதென்றும், மக்கள் வீண் குழப்பம் அடைய வேண்டாமென்றும் வடக்கு ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment