Ads (728x90)

மஹாபொல புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்துக்கென புதிய வலைத்தளமொன்றை உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தேசிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழுவில் ஆரம்பித்து வைத்தார்.

இப்புதிய வலைத்தளத்திற்கூடாக மஹாபொல புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியம் தொடர்பிலான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். தற்போது மஹாபொல புலமைப்பரிசில் நிதியத்தில் 10.5 பில்லியன் ரூபாவே கையிருப்பில் உள்ளது. இத்தொகையை 20 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பதே எமது இலக்கு எனவும் தெரிவித்தார்.
இதற்காக மஹாபொல மூலம் நன்மை பெற்ற மாணவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் பெற்றோர்கள் இவ்வளைதளத்திற்கூடாக தகவல்களை திரட்டுவதுடன் நிதியுதவி செய்து உதவுவார்களென்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

இதற்கமைய www.mahapola.lk வலைத்தளத்திற்கூடாக அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடிவதுடன் இவ்வலைத்தளம் தகவலறியும் சட்டத்தை விடவும் துரிதமாக இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.




Post a Comment

Recent News

Recent Posts Widget