Ads (728x90)

இலங்கையில் முதலாவது மிதக்கும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 42 கிலோ வோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய சூரிய சக்தியினால் இயங்கும் மின் பிறப்பாக்கி உபகரணத்தை இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரின் ஜொரன் லீ எஸ்கடேலின் அவர்கள் திறந்து வைத்தார்.

2017 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாண பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்திலுள்ள பொறியியல் பீடத்தினாலும் மேற்கு நோர்வேயிலுள்ள பிரையோக விஞ்ஞான பல்கலை கழகத்தினாலும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலமாக இந்த சூரிய சக்தியால் இயங்கும் மின் பிறப்பாக்கி உபகரணம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி மற்றும் தகவல் பகிர்வு திட்டமாக இந்த திட்டம் பயன்படுத்தப் படவுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கிளிநொச்சி பல்கலைக்கழக வளாகத்தின் தேவைக்கு பயன்படுத்தப்படும்.

உலக தூய்மையான எரிசக்தி துறையில் முக்கிய இடத்தை வகிக்கும் நோர்வே, தூய்மையான எரிசக்தி ஆராய்ச்சி திட்டங்களை உருவாக்க இலங்கைக்கு உதவுவதில் ஆர்வமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget