சீனாவின் ஹூவானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்களை தியத்தலாவ இராணுவ முகாமில் பாதுகாப்பாக தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவரென்றும் அதேவேளை மேற்படி வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களென சந்தேகிக்கப்படுவோர் ஐ.டி.எச். ஆஸ்பத்திரியில் தங்கவைக்கப்பட்டு சிகிக்சையளிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கிணங்க சீனாவிலிருந்து இலங்கை வருவோருக்கு வழங்கப்பட்ட ஒன்லைன் விஸா நடைமுறையை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார். கொழும்பு பெரியாஸ்பத்திரி, ஐ.டி.எச். ஆஸ்பத்திரி ஆகியவற்றிற்கு மேலதிகமாக நாட்டிலுள்ள 11 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
வட கொழும்பு போதனா வைத்தியசாலை, கம்பஹா, நீர்கொழும்பு, கண்டி, கராப்பிட்டிய, அநுராதபுரம், யாழ்ப்பாணம், குருநாகல், இரத்தினபுரி, மட்டக்களப்பு மற்றும் பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment