Ads (728x90)

சீனாவின் ஹுபேயிலிருந்து வந்த 43 வயதான சீனப் பெண் ஒருவர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் அங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுக்கு பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இது தேவையற்ற பயத்தை ஏற்படுத்துவதற்கான தகவல் அல்ல எனவும், விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது எனவும், சுகாதாரபகுதியினர் இதன் பரம்பலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சுகாதார பணியகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீன பெண் சுற்றுலா குழுவாக வந்து நாட்டை விட்டு வெளியேறுவதற்கு சற்று முன்னதாகவே காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு அங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்று சுகாதார பணிப்பாளர் அணில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். மேலும் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் ஆய்வு செய்யப்படுகிறது என்றும் பணிப்பாளர் தெரிவித்தார்.

குறிப்பாக நோயாளியுடன் இருந்தவர்களை சோதனை செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பணியகம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget