இளநீரை வெறும் வயிற்றில் குடித்தால்தான் பலன் கிடைக்கும். தயார் நிலையில் இருக்கக்கூடிய உடலுக்குத் தேவையான கனிமங்கள், உப்புகள் மிகுந்த, சோர்வைப் போக்கி உடனடியாக ஆற்றலைத் தரக்கூடிய பானம் இளநீர்.
மூன்று வயது குழந்தையிலிருந்து யார் வேண்டுமானாலும் இளநீர் குடிக்கலாம். பொதுவாக சாப்பாட்டுக்கு முன் இளநீர் குடிப்பது நல்லது.
இளநீரில் உள்ள கனிமங்கள் மற்றும் உப்புகளை முழுவதுமாக நம் உடல் கிரகித்துக்கொள்ள, இளநீரை வெறும் வயிற்றில்தான் குடிக்க வேண்டும். மழை, பனிக் காலங்களில் மட்டும் அதிகாலையில் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
ஆஸ்துமா, சளித் தொந்தரவு இருப்பவர்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம். அதிகக் காரத்தன்மை கொண்ட உடலுக்குச் சூட்டைக் கொடுக்கக்கூடிய, பித்தத்தை அதிகப்படுத்தக்கூடிய உணவுகளைத்தான் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இளநீர் உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது. பித்தத்தைத் தணிக்கக்கூடியது. அதனால் வெறும் வயிற்றில் குடிப்பதால் எந்தப் பாதிப்பும் இல்லை.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment