தெஹ்ரானில் மக்கள் போராட்டத்தை தூண்டியதாக ஈரானுக்கான பிரித்தானிய தூதர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஈரானுக்கான பிரித்தானிய தூதர் ராப் மாகேர் தெஹ்ரானில் ஒரு பல்கலைக்கழகத்திற்கு வெளியே நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ராப் மாகேரைக் கைது செய்வது சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயல் என பிரித்தானியா வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் கூறியுள்ளார்.
தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடுதல், தூண்டுதல் மற்றும் இயக்குதல் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பல நபர்களில் இவரும் ஒருவர் என்று கூறப்படுகிறது. டொமினிக் ராப் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெஹ்ரானில் எங்கள் தூதரை எந்த காரணமும் விளக்கமும் இன்றி கைது செய்வது சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும்.
ஈரானிய அரசாங்கம் ஒரு குறுக்கு பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இது அரசியல் மற்றும் பொருளாதார தனிமைப்படுத்தல்களுடன் ஒரு விலக்கப்பட்ட நிலையை நோக்கி தனது பயணத்தைத் தொடரலாம், அல்லது பதட்டங்களைத் தணிக்கவும், இராஜதந்திர பாதையில் முன்னேறவும் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறியுள்ளது.
முன்னதாக உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஈரானிய இராணுவ தலைமை தளபதி பதவி விலக கோரியும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment