மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகளில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறுக்கீடுகள் செய்ததாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ரணில் விசாரணைகளுக்கு எதிராக தடைகளை வைத்தார். விசாரணைகளை நடத்திய பொலிஸாருக்கு எதிரான மோசடி விசாரணைகளைத் தொடங்கினார். தடைகள் இருந்தபோதிலும் நான் விசாரணைகளை மேற்கொண்டேன். அப்போதைய மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனை சிங்கப்பூரிலிருந்து ஒப்படைக்க ஆவணமாக்கல் பணிகளை நான் செய்தேன் என மைத்திரி தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெறும் ஜனாதிபதிகள் வீட்டு வசதிகளை பெற்றுக்கொள்ள உரித்துள்ளதெனவும், அதனாலேயே தனது உத்தியோகபூர்வ இல்லத்தை தக்க வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்தார். 1984 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க ஜனாதிபதிகள் உரிமைச் சட்டத்தில் இது வரையறுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment