Ads (728x90)

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காம் கூட்டத்தொடர் நேற்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. இதன்போது சபாநாயகர் கரு ஜெயசூரிய எதிர்க்கட்சி தலைவராக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை அறிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை எதிர்கட்சி தலைவராக அறிவிக்குமாறு ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சியின் பிரதான கொறடாவாக நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget