ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிக்கவும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை நியமிக்கவும் இன்று இடம்பெற்ற ஐ.தே.க.வின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இத்துடன் பொதுத்தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நியமிப்பது எனவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும், இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவை தொடர்ந்தும் நீடித்திருப்பார் எனவும் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment