நியூஸிலாந்தில் நடைபெற்ற ஒக்லாந்து பகிரங்க டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு முதல் சம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளார்.
இத்தொடரின் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்சும், சகநாட்டு வீராங்கனையான ஜெசிகா பெகுலாவும் பலப்பரீட்சையில் இறங்கினர்.
உச்ச விறுவிறுப்பை ஏற்படுத்திய இப்போட்டியில், முதல் செட்டை செரீனா வில்லியம்ஸ் 6–-3 என கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும், தனது ஆதிக்கத்தை தொடர்ந்த செரீனா வில்லியம்ஸ், 6-–4 என செட்டைக் கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வென்றார்.
செரீனா வில்லியம்ஸ் ஒக்லாந்து பகிரங்க டென்னிஸ் தொடரில் கிடைத்த 62,300 அவுஸ்திரேலிய டொலர்கள் பணப்பரிசை, அவுஸ்திரேலிய காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக வழங்கியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment