யாழ்.நகரில் சர்வதேச வர்த்தக கண்காட்சி யாழ்.நகரின் முற்றவெளி மைதானத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்.வர்த்தக, கைத்தொழில்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் வருடா வருடம் நடைபெறும் யாழ்.வர்த்தக கண்காட்சியானது இன்றிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளன.
இந்தக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு யாழ்.பொதுநூலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கண்காட்சியை வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம். சாள்ர்ஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். குறித்த நிகழ்வில் யாழ்.மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், யாழ்.இந்திய துணை தூதுவர் பாலச்சந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment