அப்போது புரட்சிப் படைக்கும், அமெரிக்க படைகளுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில், ஈரானின் புரட்சிப் படைத் தளபதி காசீம் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த தகவலை அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பெண்டகன் அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் வெளிநாட்டில் உள்ள அமெரிக்க தூதகரகத்தின் மீது தாக்குதல் நடாத்த திட்டமிட்டிருந்த சோலிமானி என்பவனும் கொல்லப்பட்டார். இந்த தகவலை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும் அமெரிக்காவின் இந்தத் தாக்குதலை முட்டாள்தமானது என ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப் கூறியுள்ளார். ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நடைபெற்று வரும் இந்த சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment