Ads (728x90)

அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் பலி எண்ணிக்கை 23 ஆக உயர்ந்து உள்ளது. குறித்த பகுதிகளில் பதற்றம் குறையவில்லை. அவஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயின் புகையால் பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

காட்டுத்தீயை கட்டுப்படுத்த 3000 துணை இராணுவப் படையை உதவிக்கு அழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளிட்டுள்ளது.

அவஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸின் தென் கடற்கரை மற்றும் விக்டோரியாவில் உள்ள கிழக்கு கிப்ஸ்லேண்டில் உள்ள தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தீ வேகமாக பரவி வருகிறது.

இங்கு வெப்ப நிலை சனிக்கிழமை பிற்பகல் 44 டிகிரி செல்சியஸை எட்டியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு சிட்னியின் புறநகர்ப் பகுதியான பென்ரித்தில் வெப்பநிலை 48.9 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget