Ads (728x90)

21 வயதிற்கும் குறைந்தவர்களிற்கு சிகரட் விற்பனை செய்தமைக்காக அதிகளவு வா்த்தகா்கள் மீது சட்டநடவடிக்கை எடுத்த மாவட்டங்கள் பட்டியலில் அம்பாறை மாவட்டத்திற்கு 1ம் இடமும், வவுனியா மாவட்டத்திற்கு 2ம் இடமும், யாழ்.மாவட்டத்திற்கு 3ம் இடமும் கிடைத்துள்ளது.

மதுவரித் திணைக்களத்தின் 2018ஆம் ஆண்டின் தகவல்கள் பிரகாரம் 25 மாவட்டங்களிலும் குறித்த நடவடிக்கைக்காக 1036 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் உச்சபட்சமாக 246 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அம்பாறை மாவட்டம் முதலாம் இடத்திலும், வவுனியா மாவட்டத்தில் 154 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இரண்டாவது இடத்திலும், மூன்றாம் இடத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 147 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று பதுளையில் 89 வழக்குகளும், நுவரேலியாவில் 85 வழக்குகளும், புத்தளம் 79 வழக்குகளும், கண்டி 51 வழக்குகளும், மாத்தறையில் 48 வழக்குகளும், திருகோணமலையில் 27 வழக்குகளும், அம்பாந்தோட்டையில் 8 வழக்குகளும், இரத்தினபுரியில் 3 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேநேரம் கொழும்பு, களுத்துறை, கம்பகா, மாத்தளை, மொனராகலை, காலி, கேகாலை, அனுராதபுரம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய 10 மாவட்டங்களில் இருந்தும் எந்தவொரு வழக்கும் குறித்த நடவடிக்கையின் கீழ் தாக்கல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget