Ads (728x90)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கூட்டத்தொடர் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்ளும் இலங்கை இராஜதந்திர குழுவிற்கு, வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமை தாங்குகின்றார். எதிர்வரும் 26 ஆம் திகதி வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மனித உரிமைகள் பேரவையில் உரை நிகழ்த்தவுள்ளார்.

எதிர்வரும் புதன்கிழமை நடைபெறும் பேரவையின் உயர்நிலை அமர்வில் உரையாற்றவுள்ள அமைச்சர் தினேஷ் குணவர்தன அரசாங்கத்தின் தீர்மானத்தை உறுப்பு நாடுகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

அத்துடன் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான முன்னேற்ற விளக்கத்திற்கு அமைச்சர் எதிர்வரும் 27ஆம் திகதி பதிலளிக்கவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் இலங்கை தொடர்பில் தயாரித்துள்ள அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார். இந்த அறிக்கை எதிர்வரும் 26 ஆம் திகதி மனித உரிமைக் பேரவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget