Ads (728x90)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கைப் பிரஜையாகக் இருந்து கொண்டு இந்த நாட்டுக்கு ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்று கூறி வருகின்றார். இப்படிக் கருத்துரைப்பதை சம்பந்தன் உடனடியாக நிறுத்த வேண்டும் என தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் ஐ.நா. தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கி இலங்கையின் கௌரவத்துக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது. நாம் அதனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிப் பொறுப்பேற்று நூறு நாட்கள் பூர்த்தியாகியுள்ளன. இந்த நூறு நாட்களுக்குள் கொள்கை ரீதியாக பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அவற்றில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு வழங்கிய இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக எடுத்த முடிவை சிறந்ததாகக் கருத முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதற்கு வெளியில் இருக்கும் எவருக்கும் அதிகாரம் கிடையாது. அதனடிப்படையிலேயே நாம் ஐ.நா. தீர்மானங்களிலிருந்து விலகத் தீர்மானித்தோம். போர் தொடர்பில் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நாமே விசாரணைகளை முன்னெடுத்து தீர்வைக்க காண்போம் எனவும் அவர் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget