கடந்த ஈஸ்டர் தினத்தில் நாட்டில் இடம்பெற்ற தாக்குதலையடுத்து சுற்றுலாத்துறை பாதிப்பை எதிர்நோக்கியிருந்தது. இதனால் சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்பும் வகையில் இலவச ஒன் அரைவல் விசா திட்டம் கொண்டு வரப்பட்டது.
கடந்த ஓகஸ்ட் மாதத்திலிருந்து 06 மாதங்கள் அமுலில் இருந்த இந்த சலுகைத்திட்டமானது இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில் குறித்த இலவச ஒன் அரைவல் விசா திட்டத்தை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment