Ads (728x90)

வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விசா வழங்கும் நடவடிக்கையை நிறுத்துவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இலங்கையில் அதன் தாக்கம் ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், கட்டுநாயக்க விமான நிலையதில் வைத்து உள் வருகை விசாவை பெற்று வந்தனர். எனினும் அந்த நடவடிக்கை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள் வருகை விசா நடைமுறை நிறுத்தப்படுவதுடன், முன்கூட்டியே விசா பெற்றுக்கொண்ட பின்னரே இலங்கைக்குள் எந்தவொரு வெளிநாட்டவரும் வர முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget