Ads (728x90)

நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இன்று பிரித்தானியா வெளியேறுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 28 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதிலிருந்து வெளியேற பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தரப்பினர் விருப்பம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பிரிட்டனில் கடந்த 2016-இல் நடந்த பொது வாக்கெடுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் வாக்களித்தனர். இதையடுத்து இது தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கின.

எனினும் பிரெக்ஸிட் சட்டமூலத்தை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிரதமர்கள் அடுத்தடுத்து பதவி விலகினர். இறுதியாக போரிஸ் ஜோன்சன் பிரதமரானார். அவராலும் இதற்கான சட்டமூலத்தை நிறைவேற்ற முடியவில்லை.

இதையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடந்தது. இதில் ஆளும் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, ஜோன்சன் மீண்டும் பிரதமரானார். இதையடுத்து, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் சட்டமூலம் கடந்த வாரம் நிறைவேறியது. இதன்மூலம் 3 ஆண்டுகள் நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது.

தொடர்ந்து பிரிட்டன் வெளியேறுவதை அனுமதிக்கும் சட்டமூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது விவாதம் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரிட்டனின் வெளியேற்றத்துக்கு ஆதரவாக 621 வாக்குகளும் எதிராக 49 வாக்குகளும் பதிவாகின. 13 உறுப்பினர்கள் வாக்கெடுப்பை புறக்கணித்தனர்.

இதையடுத்து இந்தச் சட்டமூலம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் இன்று முறைப்படி வெளியேறுகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget