Ads (728x90)

யாழ்ப்பாண மண்ணை மரியாதையுடன் வணங்குகிறேன் என யாழ். மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் மாவட்ட செயலகத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் வரவேற்பளித்தனர்.

இதன்போது உரையாற்றிய அவர் யாழ்ப்பாண மண்ணானது பெருமைக்கும், பண்பாட்டுக்கும் பெயர்போனது. உலகில் தமிழன் என்றால் அது யாழ்ப்பாணம் என்று தான் அடையாளப்படுத்தப்படுகிறது. அவ்வாறான மண்ணினை நினைத்துப் பெருமைப்படுகிறேன். மரியாதையுடன் வணங்குகிறேன் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget