Ads (728x90)

ஜெனீவாவில் 2001 ஆம், 2016 ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளை இலங்கை மீளப்பெறுமென சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

கொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

இவ்விடயத்தில் முன்னாள் அரசாங்கம் பாராளுமன்றத்தை கருத்தில் கொள்ளாமலேயே இவ்விடயங்களை முன்னெடுத்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் இதுபோன்ற குறுகிய நோக்கமுடைய செயற்பாடுகளின் காரணமாகவே எமது இராணுவ வீரர்கள் மீது அடிப்படையற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதற்கு காரணமாகியுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget