Ads (728x90)

உலகளவில் அதிகமான ஸ்மார்ட்போன் பாவனையாளர்களின் விருப்பமான போனாக ஐபோன் இருந்தாலும் அதன் விலை மற்றும் சில வசதிக் குறைபாடுகளால் அதை அதிக அளவில் யாரும் வாங்குவதில்லை. ஆனாலும் உயர்தர வர்க்கத்தினருக்கு ஒரு கௌரவமாகவே ஐபோன் வைத்திருப்பது இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உலகளவில் அதிகமாக விற்கப்பட்ட போன்களில் ஐபோன் முதலிடம் பிடித்துள்ளது. அதற்கடுத்த இடங்களில் சாம்சங் மற்றும் ஹவாய் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

2019ம் ஆண்டின் 4ஆவது காலாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கையை வைத்து கவுண்ட்டர்பாயிண்ட் ரிசர்ச் என்ற நிறுவனம் இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளன. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட குறைந்தவிலை ஸ்மார்ட்போன்களால் இந்த விற்பனை அதிகமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.





Post a Comment

Recent News

Recent Posts Widget