Ads (728x90)

காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தல், அது குறித்த விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்தல் மற்றும் இழப்பீடுகளை வழங்குதல் ஆகியவை இடம்பெற வேண்டும் என்றே ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளும் இலங்கையிடம் வலியுறுத்தி வருகின்றன என்று ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹனாசிங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோரின் உறவுகளுக்கான பதிலைப் பெற்றுக் கொடுப்பதற் கான முக்கிய பணியைச் செய்து வரும் காணாமல்போனோர் அலுவலகத்தினரைச் சந்தித்தேன். இலங்கையில் காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும், அதுகுறித்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என்றுமே ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன என கூறியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget