Ads (728x90)

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு வழங்கப்பட்ட இணை அனுசரணை 40/1 மற்றும் அதற்கு முந்தைய 30/1, 34/1 ஆகிய தீர்மானங்களில் இருந்து விலகிச் செல்வதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அறிவித்தார்.

அனுசரணையில் இருந்து விலகிச் சென்றாலும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் போன்றவற்றிலிருந்து விலகி செல்லப் போவதில்லை என தெரிவித்த தினேஷ் குணவர்த்தன, பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுப்பதற்கு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் போர் முடிவுக்கு வந்ததில் இருந்து இன்று வரை இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களை விளக்கிக் கூறிய வெளிவிவகார அமைச்சர்,ஜனாதிபதித் தேர்தலின் போது மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைவாகவே இணை அனுசரணையில் இருந்து விலகி செல்வதாகவும் அறிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget