இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை, யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்த காலமாக பொறுப்புக் கூறலை தட்டிக்கழித்து வந்த இலங்கை அரசாங்கங்களின் கண்களை திறக்கும் என எதிர்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வாவும் அவரது குடும்பத்தினரும் ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தினுள் நுழைவதை அமெரிக்கா தடை செய்து கட்டளை பிறப்பித்துள்ளது.
போரின் இறுதிக் கட்டத்திலே இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனிதாபிமானத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுக்கான ஆதரங்களின் அடிப்படையில் 58 ஆவது பிரிவின் கட்டளை தளபதியாக இருந்த ஷவேந்திர சில்வா பொறுப்பு கூற வேண்டியவராகின்றார்.
ஷவேந்திர சில்வா இராணுவ தளாதியாக நியமிக்கப்பட்ட வேளை மேற்குறித்த அதே காரணங்களின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவரது நியமனத்தினை கண்டிருத்திருந்தது.
யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்த காலமாக பொறுக் கூறலை தட்டிக்கழித்து வந்த இலங்கை அரசாங்கங்களின் கண்களை இத்தடை திறக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment