Ads (728x90)

ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு (ஶ்ரீ லங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய) கட்சியில் மொட்டு சின்னத்தில் போட்டியிட ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிகள் முடிவு செய்துள்ளன.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரு கட்சிகளும் இணைந்து உருவாக்கியுள்ள இக்கூட்டமைப்பின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும், தவிசாளராக மைத்திரிபால சிறிசேனவும் நியமிக்கப்பட்டுள்ளதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

குறித்த இரு கட்சிகள் உள்ளிட்ட மேலும் 9 கட்சிகள் இணைந்து இக்கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இக்கட்சியின் செயலாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச மற்றும் ஸ்ரீ.ல.சு.கவின் பொதுச் செயலாளர் தயசிறி ஜயசேகர ஆகியோர் தேசிய அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.




Post a Comment

Recent News

Recent Posts Widget