இதன்படி இன்று பல்கலைக்கழக பீடாதிபதிகள் அடங்கிய ஒழுக்காற்று குழு இந்த விவகாரத்தில் விசாரணை நடாத்தவுள்ளது. இதேவேளை பல்கலைக்கழக மட்டத்திலான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நான்கு மாணவிகளிற்கு பல்கலைகழக மாணவர்கள் சிலர் தொலைபேசி வழியான பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மாணவிகளின் நிர்வாண புகைப்படங்களை அனுப்பி வைக்கும்படி வற்புறுத்தியதுடன், நிர்வாண புகைப்படங்களை அனுப்பாத மாணவிகளை பல்கலைகழகத்தில் நுழைய முடியாதென்றும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இவர்களின் புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இதனால் ஒரு மாணவி தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. மாணவியின் பெற்றோர் வடக்கு ஆளுனர் அலுவலகத்திலும் முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்து, நேற்று மாலை ஆளுனர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு, உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் அளவுக்கதிகமாக பகிடிவதை இடம்பெறுகின்றமை மற்றும் தொலைபேசி மூலமான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும், உயர் கல்வி அமைச்சுக்கும் கிடைத்த முறைப்பாடுகளையடுத்து, பகடிவதைக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சு மட்டத்திலும், வடக்கு மாகாண ஆளுநர் மட்டத்திலும் இருந்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
Post a Comment