Ads (728x90)

ஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகுவது அரசாங்கத்துக்கு தேர்தலுக்கும் உதவியாக இருக்கும். தேர்தலில் நாங்கள்தான் பெரும்பான்மையான மக்கள் சார்பாக ஒரு துணிச்சலான முடிவை எடுத்திருக்கிறோம் என்று கூறுவதற்கு அவர்களுக்கு வசதியாக இருக்கும்.

ஆனால் இவ்விதமாக விலகுவதன் மூலமாக அந்தத் தீர்மானத்தை நீங்கள் வலுவிழக்கச் செய்யலாம் என்று நீங்கள் நினைத்தால் அது நடக்காது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகவியலாளார்களிடம் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்தில் இருந்து விலகுவதாகக் கூறியிருக்கின்றார்கள். மிக விரைவில் வெளிவிவகார அமைச்சர் அங்கே சென்று இந்தக் கருத்தைக் கூறஇருக்கிறார்கள் என நாங்கள் அறிகின்றோம்.

அதற்கு முக்கியமான காரணம் போர்நடந்த பொழுது போர் நடந்த விதம் சம்பந்தமாக பொறுப்புக் கூற வேண்டியவர்கள் இராணுவ வீரர்கள் மாத்திரமல்லர். அவர்களையும் பார்க்க கூடுதலாகப் பொறுப்புக் கூறக் கூடியவர் ஜனாதிபதி. அவர்தான் நாட்டின் இராணுவத்தின் கட்டளைத் தளபதி. பாதுகாப்பு அமைச்சர் என அவ்விதமாகப் பலர் சம்மந்தப்படுகின்றனர். தனியே யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் மாத்திரமல்லர்,

அவர்களையும் பார்க்க மேலதிகமாக பொறுப்புக் கூற வேண்டியவர்கள், அவ்விதமான பதவியில் இருந்தவர்கள். யுத்தத்தை வழிநடத்தியவர்கள். யுத்தத்தின் போது பல விதமான கட்டளைகளை ஏற்படுத்தியவர்கள். யுத்தத்தின் போது எந்த விதமாக யுத்தம் நடைபெற வேண்டும் எனத் தீர்மானித்தவர்கள்.

யுத்தம் நடந்த போது பாதுகாப்பு வலயங்கள் என்று சொல்லப்பட்ட சில பிரதேசங்களுக்கு பொது மக்களைப் போகச்சொன்னார்கள். அவ்விதமாக மக்களும் போனார்கள். ஆனால் அந்த இடங்கள் தாக்கப்பட்டன. பொது மக்கள் கொல்லப்பட்டார்கள் என தெரிவித்துள்ளார்.







Post a Comment

Recent News

Recent Posts Widget