வடக்கில் சோதனைச் சாவடிகளை அமைத்து தமிழ் மக்களை சிரமத்துக்கு உள்ளாக்க வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
சுதந்திரதின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது தமிழர்களை தனிமைப்படுத்தும் அரசியல் இடம்பெறுவதாகவும் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விசேட வியாபாரப்பண்டங்கள் அறவீட்டுக் கட்டளைச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாகக் கூறி வடக்கில் முப்படையினர் மூலம் பல்வேறு சோதனை நடவடிக்கைகள் ஆரம் பிக்கப்பட்டுள்ளன. வவுனியா, கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இவ்வாறு திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெ டுக்கப்படுகின்றன. பேருந்து முதல் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
நாட்டில் போதைப்பொருள் கடத்தப்படும் இடங்கள் எங்கேயோ உள்ளன. போதைப்பொருள் பண்டாரகமவில் அகப்படும் போது வவுனியாவில் சோதனை செய்கின்றனர். தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடாகவே இதனைப் பார்ப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment