Ads (728x90)

வழங்கப்பட்டுள்ள விடுமுறை தொடர்பில் இதுவரை எந்தவித தெளிவுப்படுத்தல்களையும் அரசாங்கம் வழங்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அதன் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துளளார்.

அரச துறையினருக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை எவ்வாறானது என தெளிவுப்படுத்தப்படவில்லை.

அதேபோன்று தனியார் துறையினருக்கும் அந்த தெளிவூட்டல்களை அரசாங்கம் வழங்கவில்லை.

இலங்கை நிர்வாசேவை சட்டத்தின் கீழ், சபையின் தலைவராக ஜனாதிபதியும், பிரதி தலைவராக பிரதமரும் செயற்படுகின்றனர்.

எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட 21 அமைச்சுக்களின் அமைச்சர் இந்த குழுவில் கூடவேண்டும்.

ஆகவே, நிர்வாக சேவை சட்டத்தின் அடிப்படையில் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget