Ads (728x90)

ஓய்வூதியக்காரர்களுக்கான ஓய்வுதிய கொடுப்பனவுகள் ஏப்ரல் மாதம் 2, 3 ஆந் திகதிகளில் செலுத்தப்படவிருப்பதாக அத்தியாவசிய சேவைகள் ஜனாதிபதி விசேட செயலணிக்கூட்டத்தில்  தீர்மானிக்கபபட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் 2, 3 ஆந் திகதிகளில் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் செலுத்தப்படும். இந்த இரண்டு தினங்களினுள் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் இருப்பின், ஏப்ரல் 6 ஆந் திகதி கொடுப்பனவுகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

அஞ்சல் அலுவலகங்கள் ஊடாக ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ளும்  ஓய்வுபெற்றோரின் வீடுகளுக்கு அல்லது கிராம அலுவலர் பிரிவுக்கு அஞ்சல் திணைக்களம் ஊடாக ஓய்வூதியம் கொண்டுவந்து ஒப்படைக்கப்படும்.

அந்தந்த வங்கிகள் ஊடாக ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்வோரின் பணம் ஏற்புடைய வங்கிக் கணக்குகளுக்கு ஏப்ரல் 2,3 ஆகிய திகதிகளில் வரவு வைக்கப்படும்.


Post a Comment

Recent News

Recent Posts Widget