Ads (728x90)

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் நாடு பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. அடுத்த 21 நாட்கள் நமக்கு மிகவும் முக்கியமானது. கரோனா வைரஸ் நம்மைத் தாக்காது என யாரும் நினைக்கக் கூடாது. அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இன்றிரவு 12 மணி முதல் ஊரடங்கு அமுலுக்கு வருகிறது. நாட்டு மக்கள் அனைவரும் ஊரடங்குக்கு ஒத்துழைக்க வேண்டும். மருத்துவர்கள் தவிர யாருக்கும் ஊரடங்கின்போது அனுமதியில்லை.பிரதமர் முதல் சாதாரண குடிமகன் வரை அனைவரும் ஊரடங்குக்குக் கட்டுப்பட்டு சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும். வல்லரசு நாடுகளாலேயே கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த 21 நாட்களை மக்கள் ஆக்கப்பூர்வமானதாகப் பயன்படுத்த வேண்டும்.கரோனா சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான உபகரணங்களுக்காக ரூ. 15,000 கோடியை மத்திய அரசு ஒதுக்குகிறது. மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைபிடித்தால் தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

இந்த கடினமான சூழலில் அரசு அறிவுரைகளை ஏற்று அனைத்து நாட்டு மக்களும் தங்களைத் தாங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளைப் பின்பற்றினால்தான் நாடு கடினமான சூழலில் இருந்து மீள முடியும் என தெரிவித்துள்ளார்..

Post a Comment

Recent News

Recent Posts Widget