Ads (728x90)


நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக, 3 இலட்சத்து ஆயிரத்து 253 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

53 ஆயிரத்து 157 குடும்பங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் சில மாதங்களாக நிலவும் வரட்சியான காலநிலையின் காரணமாக சுற்றுலா துறை பாரிய பாதிப்பை எதிரநோக்கியுள்ளதாக சுற்றுலா துறையுடன் தொடர்புடையவர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget