சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் அங்கு சிக்கியுள்ள தமிழகத்தைச் சேரந்த மாணவர்கள், தங்களை மீட்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதிலும் பரவி வருகிறது. இதுவரை கொரோனாவால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ள நிலையில், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தை சேர்ந்த 55 மாணவர்கள் இத்தாலியில் சிக்கியுள்ளனர்.
இத்தாலியில் மிலன் மல்பென்சா விமான நிலையத்தில் உள்ள அவர்கள் கொரோனா தகுதி சான்று இல்லாததால் இந்தியா வர முடியாமல் சிக்கியுள்ளதாகவும், இந்திய அரசு தங்களை மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான முதல் இலங்கையர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment