
கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுதல் ஆகியன பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த பொருட்களுக்கு சில இடங்களில் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய அரசாங்கம் முகக்கவசம், கைகழுவும் திரவம் (சானிடைசர்), கையுறைகள் ஆகியவற்றை அடுத்த 100 நாட்களுக்கு அத்தியாவசிய பொருட்களாக அறிவித்துள்ளது. அதோடு பேரிடர் மேலாண்மை விதிகளையும் அமுல்படுத்தி உள்ளது.
இதன்மூலம் இந்திய மாநில அரசாங்கங்கள் இவைகளின் உற்பத்தி, விநியோகம், விலை ஆகியவற்றை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும். இவைகளை பதுக்கவோ கள்ளச்சந்தையில் விற்கவோ முடியாது எனவும் இந்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
Post a Comment