
இலங்கைக்கு வரும் அனைத்து விமானங்களும் இன்று நள்ளிரவு முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும். இந்த தடை பயணிகள் விமானங்களுக்கு மாத்திரம் பொருத்தமானது. இருப்பினும் இலங்கையில் இருந்து வெளியேறுவதற்கு எவருக்கும் அனுமதி இருப்பதாக விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இணையம் மற்றும் இணையத்துடன் தொடர்புபடாத வகையில் விமான பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு விமான சேவைகள் அதிகார சபை விடுத்துள்ள செய்தி:
இணையம் மற்றும் இணையத்துடன் தொடர்புபடாத வகையில் விமான பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு இலங்கை சுகாதார சேவை அதிகாரிகளினால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைய, இலங்கையில் உள்ள சர்வதேச விமானங்களின் செயற்பாடுகள் அதாவது சர்வதேச வர்த்தக பயணிகள் விமானம் (வருகை ) இம் மாதம் 19 ஆம் திகதி 4 மணி தொடக்கம் மார்ச் மாதம் 25 ஆம் திகதி வரை மூடப்படும் என விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.
Post a Comment