Ads (728x90)

நாளுக்கு நாள் உயிர் பலி எடுக்கும் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இது வரை  7 ஆயிரத்து 130 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் ஒரு இலட்சத்து 81 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்மையில் இந்திய ஜெயப்பூரில் மருத்துவர்கள் குழாம் ஒன்று கொரோனா வைரஸினை தடுப்பதற்கு மருந்தொன்றினை கண்டுபிடித்தது.

அதே சமயத்தில் அமெரிக்காவில் இயங்கும் Moderna என்ற நிறுவனம் அமெரிக்க தேசிய சுகாதார மையத்துடன் இணைந்து இந்த தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிக்கு MRNA -1273 என பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மருந்தானது உடல் ஆரோக்கியத்துடன் காணப்படும் 18 முதல் 55 வயதிற்கிடைப்பட்ட 45 பேருக்கு முதற்கட்டமாக செலுத்தி பரிசோதனை செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு இன்றைய தினம் முதலாவது நபருக்கு உட்செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த தடுப்பூசியானது கைகளின் மூலமே உட்செலுத்தப்படுவதாகவும் அதன் மூலம் அவர்களுக்கு காய்ச்சல் உடல் நலக்குறைவு ஏற்படுகின்றதா அல்லது ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றதா என்பது தொடர்பில் அவதானிக்கப்பட்டு வருவதாகவும் மொடெர்னா நிறுவனம் மற்றும் அமெரிக்க தேசிய சுகாதார மையம் அறிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget