Ads (728x90)

கடந்த ஐந்தாம் திகதிக்கு முன்னர் நாட்டிற்கு பிரவேசித்த 2 ஆயிரத்து 572 பேர் மற்றும் மார்ச் 5 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை உத்தியோகபூர்வமாக நாட்டிற்குள் நுழைந்த மூவாயிரத்து 460 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

புத்தளம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள், மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகள் மற்றும் தென் மாகாணத்தின் சில பகுதிகளில் வைரஸ் தொற்றக் கூடிய அவதானம் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தற்போது அடையாளங் கண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்டார், பஹரோன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் வரும் பயணிகளுக்கு இன்று நள்ளிரவு முதல் நாட்டில் பிரவேசிக்க அனுமதியில்லை என பொது விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget