இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கொரோனா தனிமைப்படுத்தலுக்கான நான்கு முகாம்களில் இருந்து நேற்று 615 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என இலங்கை இராணுவ தடுப்பு மருந்து சேவை பொது சுகாதார நிபுணத்துவ துணை இயக்குநர் வைத்தியர் கேணல் சவீன் சேமகே தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் புனாணை, மட்டக்களப்பு பல்கலைக்கழகம் மற்றும் மீயான்குளம் இராணுவ முகாம் ஆகிய கொரோனா தடுப்பு முகாம்களில் கடந்த 14 நாள்களாகத் தடுத்து வைக்கப்பட்டு மருத்துவக் கண்கானிப்பில் வைக்கப்பட்டவர்கள் எவ்விதமான நோய்த் தொற்றும் இல்லாத நிலையில் தங்களின் குடும்பங்களுடன் இணைக்கும் பணி நேற்று இடம் பெற்ற போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு முகாமில் உள்ளவர்களுக்கு பரிசோதனைகள் இடம்பெற்று வரும் நிலையில் இன்னும் 33 நாள்களின் பின்னர் அனைவருரையும் தங்களின் குடும்பங்களுடன் இணைக்கும் பணி இடம்பெறும்.கொரோனா தடுப்பு தனிமைப்படுத்தல் முகாமில் உள்ளவர்கள் 14 நாள்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு திருப்தி இன்மை ஏற்பட்டால் மீண்டும் ஐந்து நாள்கள் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் இடம்பெறும். அத்தோடு சுகாதார திணைக்களத்தின் நேரடிக் கண்காணிப்பின் பின்னர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டவர்கள் 14 நாள்களுக்குப் பின்னர் விடுவிப்பு செய்யப்படுகின்றனர்.
புனாணை மட்டக்களப்பு பல்கலைக் கழக கொரோனா தடுப்பு முகாமில் இருந்து நான்கு பஸ்கள் மூலமாக 125 பேரும், மியான்குளம் கொரோனா தடுப்பு முகாமில் இருந்து ஒரு பஸ் மூலமாக 18 பேருமாக 143 பேர் நேற்றுக் காலை 08.00 மணியளவில் நித்தம்புவ, கொழும்பு, குருநாகல், காலி, மாத்தறை போன்ற பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment