Ads (728x90)

மத்திய வங்கி, வணிக வங்கிகள், காப்புறுதி சேவைகள் மற்றும் திறைசேரி ஆகியவற்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அத்தியாவசிய சேவைகளாக அறிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சுகாதாரம், பாதுகாப்பு, பொலிஸ், பொருட்கள் விநியோகம், சுங்கம், மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவை பிற அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஊரடங்கு உத்தரவின் போது, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கை மத்திய வங்கி, வணிக வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், அவற்றின் கிளைகள் மற்றும் திறைசேரியை குறைந்தபட்ச எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் திறந்து வைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டீ.லக்ஷமனுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget