Ads (728x90)

சுவிஸ் பாஸ்டரை சந்தித்து பேசிய போது கொரானா தொற்றுக்கு உள்ளாகிய நபரின் மனைவியான சமுர்த்தி உத்தியோகத்தர், சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவை வழங்கியுள்ளதால் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் மற்றும் அந்த சமுர்த்திக் கொடுப்பனவை பெற்றவர்கள் என அத்தனை பேரையும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் அவர்  நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். மேலும்,
தொற்றுக்கு உள்ளானவரின் மனைவி சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றுகிறார்.
அவர் அண்மையில் 214 சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்கியுள்ளார். எனவே அவரிடம் இருந்து சமுர்த்தி கொடுப்பனவினை பெற்றுக் கொண்ட பயனாளிகள் அனைவரையும் அடையாளம் கண்டு அவர்களையும் தனிமைப்படுத்தி கண்காணிக்க உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget