Ads (728x90)

லண்டனில் சற்று முன்னர் பலி எண்ணிக்கை 177 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 40 பேர் இறந்துள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. ஒரு நாளைக்கு 30 பேர் இறந்து வந்த நிலையில். தற்போது ஒரு நாளைக்கு 40 பேர் என்ற நிலை தோன்றியுள்ளது.
இது இவ்வாறு இருக்க, லண்டனில் கொரோனா வைரஸ் நோயாளிகளை, பராமரிக்கும் 90% சதவிகிதமான வைத்தியசாலைகளில் ICU என்று அழைக்கப்படும், அதி தீவிர சிகிச்சைப் பிரிவு வார்டுகள் முழுமையாக நிரம்பி வழிவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே புதிய நோய் தொற்றாளர்கள் சாதாரண வார்டுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.
ஹரோவில் உள்ள நோத்விக் பார்க் வைத்தியசாலை,  மற்றும் நோத் வெஸ்ட் வைத்தியசாலைகள் முற்று முழுதாக நிரம்பி வழிவதால். இனி அங்கே எந்த ஒரு நோயாளியையும் எடுக்க முடியாது என்று அதன் நிர்வாகிகள் அறிவித்துள்ள நிலையில். ஏனைய மருத்துவமனைக்கு நோயாளிகளை கொண்டு செல்லவேண்டி உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
ஒட்டு மொத்தத்தில் இத்தாலி போல, ஒரு வயதுக்கு மேற்பட்ட நபர்களை அப்புறப்படுத்தி, அவர்கள் இறக்கும் வரை வைத்தியசாலையில் ஒரு பிரிவில் வைத்திருக்க போகிறார்களோ தெரியவில்லை. பிழைப்பார்கள் என்று தெரிந்தால் மட்டுமே மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது இத்தாலி. பிழைக்க மாட்டார்கள் என்று தெரிந்தால். அப்படியே கட்டிலில் விட்டு விடுகிறார்கள் வைத்தியர்கள்.
அப்படியான ஒரு நிலை தான் லண்டனிலும் தோன்ற உள்ளதா ? தெரியவில்லை என்கிறார் நோத் விக் பார்க் வைத்தியசாலையில் வேலை பார்க்கும் தமிழ் மருத்துவர் ஒருவர்.  தயவு செய்து வீட்டில் இருங்கள். நோயில் இருந்து தப்பலாம் ! மற்றவர்களுக்கு பரப்பாமல் இருக்கலாம் ! இன் நோயை ஒரு கட்டுபாட்டினுள் கொண்டு வரலாம் 

Post a Comment

Recent News

Recent Posts Widget