சீனாவில் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி கொரோனா வைரஸ் தோன்றியது. இந்த 3 மாத காலத்தில் அந்த வைரஸ் 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி விட்டது. சீனாவில் அதன் தாக்கம் சற்றே குறைந்து வந்தாலும் இத்தாலி, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் ஆதிக்கம் வலுத்து வருகிறது.சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி உயிர்பலி வாங்கி வருகிறது.
இந்த நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பிய ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோஃபிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
Post a Comment