Ads (728x90)

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.  சீனாவில் மட்டும் கொரோனா வைரசால் 3042 பேர் பலியாகியுள்ளனர். தென்கொரியா,  ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.

வைரஸ் பரவுவதை தடுக்க இத்தாலி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.   கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 189 பேர் பலியாகி உள்ளனர். 2,000-க்கும் அதிகமானவர்கள்கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை  827லிருந்து 1,016 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,462 லிருந்து 15,113 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இத்தாலி முழுவதும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் கியூசெப்பே கோன்ட்டே அறிவித்துள்ளார்.  இதன் மூலம் இத்தாலியில் வசிக்கும் மக்கள் உடல்நலம், அவசர வேலை தவிர பிற காரணங்களுக்காக தாங்கள் வசிக்கும் இடங்களை விட்டு மற்ற இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 மேலும், பொதுமக்கள் அவசர தேவையின்றி வேறு எக்காரணம் கொண்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget