கொரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது சீனாவில் ஓரளவு கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது
இந்நிலையில் சீனாவை அடுத்து ஈரான் மற்றும் இத்தாலியில் கொரோனா வைரசினால் ஏற்படும் பலி எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் இத்தாலியில் 50 பேரும், ஈரானில் 49 பேரும் ஆக இந்த இரண்டு நாடுகளிலும் 99 பேர் கொரோனா வைரசால் பலியாகியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இனிமேல் கொரோனா பரவாமல் இருக்க அதிதீவிர முயற்சிகளை இருநாட்டின் அரசுகளும் செய்து வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நகரங்களை தனிமைப்படுத்தி சீல் வைத்துள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இரு நாட்டு அரசுகள் திணறி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது
இன்று ஒரே நாளில் ஈரானில் 49 பேர் பலியாகி இருப்பதாகவும் 743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் இத்தாலியில் இன்று ஒரே நாளில் 50 பேர் உயிரிழந்ததாகவும் 250 பேர் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் ஈரானின் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஏப்ரல் மாதம் வரை அனைத்து பபடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment