கொரோனா வைரஸ் பரவல் தொடர்பிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. ஏற்கனவே வெளிநாடுகளிலிருந்து இலங்கை வந்த 3,900 பேர் பொதுச் சுகாதார பரிசோதகர்களுடன் இணைந்து சுகாதார பிரிவால் கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கை வரும் பயணிகள் இன்று முதல் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
அதற்கமைய இன்று அதிகாலை 4.00 மணிக்கு தென் கொரியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வரும் பயணிகள், தனிமைப்படுத்தல் மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ள, மட்டக்களப்பு, புனானியில் நிர்மாணிக்கப்பட்ட பெற்றி கம்பெஸ் என அழைக்கப்படும் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்திற்கும் பொலன்னறுவவில் உள்ள கந்தகாடு மறுவாழ்வு மையத்திற்கும் கொண்டு செல்லப்படவுள்ளார்கள்.
இதற்கென சுகாதார அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விசேட பஸ் மூலம் அவர்கள் அங்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் 14 நாட்களுக்கு அங்கு தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்படவுள்ளார்கள்.

Post a Comment